» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி

சனி 28, ஜனவரி 2023 12:38:35 PM (IST)கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் இளைஞர்களின் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலக்குமி மேல்நிலைப் பள்ளி, காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலிருந்து தேசிய மாணவர் படை,நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்கம், பசுமை படை, நுகர்வோர்மன்றங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள்கைகளில் தேசிய கொடி ஏந்தி தூய்மை இந்தியா விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலமாக  கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பிருந்து துவங்கி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி எட்டையாபுரம் சாலை வழியாக மீண்டும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.

விழிப்புணர்வு பேரணிக்கு ஜேசிஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை வகித்தார்.ஜேசிஐ முன்னாள் தலைவர்கள் லட்சுமி விக்னேஷ்,அருண்,முரளி கிருஷ்ணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜேசிஐ செயலாளர் சூர்யா அனைவரையும் வரவேற்றார்.  விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், மாவட்ட நூலக ஆய்வாளர் (பணி நிறைவு) பூல்பாண்டி,உள்பட ஜேசிஐ உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜேசிஐ பொருளாளர் விஜய் கண்ணன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory