» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடு வருமா?: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

வியாழன் 29, டிசம்பர் 2022 8:09:44 AM (IST)

சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ வல்லுனர்கள் அளி்ககும் ஆலோசனையின் பேரில் கரோனா கட்டுப்பாடுகளை பள்ளிகளில் கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக தூத்துக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைத்து இருந்தோம். தற்போது மீண்டும் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை தொடங்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து துறை ரீதியாக ஆலோசனை செய்து மீண்டும் திருச்செந்தூர் கல்வி மாவட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

கரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் அலுவலகம், சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ வல்லுனர்கள் இணைந்து ஆலோசித்து, கரோனாவின் தாக்கம், வீரியம் எப்படி இருக்கிறது? முககவசம் அணிவதை கட்டாயமாக்கலாமா? ஊரடங்கு தேவையா? என முடிவு எடுப்பார்கள். அதன் அடிப்படையில் கரோனா கட்டுப்பாடுகளை பள்ளிக்கூடங்களில் கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பான கோரிக்கையும் விைரவில் நிறைவேற்றப்படும். 

அரசு பள்ளிகளில் நடைபெறும் கலைத்திருவிழாவை தனியார் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர்களும் பாராட்டுகின்றனர். இதன் நிறைவாக வருகிற 12-ந்தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். தமிழகத்தில் வகுப்பறைகள் இல்லாத பள்ளிளுக்கும், மரத்தடியில் நடைபெறும் பள்ளிகளுக்கும் முன்னுரிமை வழங்கி புதிய வகுப்பறைகள் கட்டப்படும். இந்த பணிகள் வருகிற ஜனவரி மாதத்தில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory