» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

புதன் 14, டிசம்பர் 2022 3:54:40 PM (IST)



தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவிகளுக்கு பாரதிதாசன் பல்­கலைக்கழகத்தின் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி  அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரியும், திருச்சி பாரதிதாசன் பல்­கலைக்கழகத்தின் சுய­தொழில் மற்றும் திறன் வளர்ப்பு மையமும் இணைந்து பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கு போதிய கம்ப்யூட்டர் அறிவை பெறவும், அதன் மென்பொருட்கள் பயன்படுத்தும் திறன்களில் வளர்ச்சி பெறவும் மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 26  மாணவிகள் 10 நாள் பயிற்சியை பெற்றுள்ளனர். 

பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கும் விழா ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரி முதல்வர் பாலசண்முக தேவி  தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வ.உ.சி. கல்விக்கழக செயலாளர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் கலந்து கொண்டு பள்ளி  மாணவிகளுக்கு பல்கலைக்கழக சான்றிதழ்களை வழங்கி மாணவிகளுக்கு கணிப்பொறிக் கல்வியின் அவசியம் பற்றி பேசினார். நிகழ்ச்சியில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராதா, சிவகாம சண்முகசுந்தரி, ஆசிரியை டெய்சி, ஜானி சோபியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஆர்.தட்சிணாமூர்த்திDec 15, 2022 - 08:40:42 AM | Posted IP 162.1*****

பயனுள்ள பயிற்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory