» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் வேம்பார் அரசு பள்ளி மாணவிகள் சிறப்பிடம்!

புதன் 14, டிசம்பர் 2022 11:00:20 AM (IST)



தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 5பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு கடந்த அக்டோபரில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதில் கலந்து கொண்டன. வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வர்ஷினி, முத்துமாரி, மரிய ஜென்சியா, பிரியா, பிரான்கா ஆகிய ஐந்து மாணவிகள் தேர்ச்சி பெற்று கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். 

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் உதவித் தொகையாக மாதம் 1500 வீதம் ரூ.36ஆயிரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவிகளையும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் வனஜா மற்றும் மாணிக்கராஜ் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, உதவி தலைமை ஆசிரியர் மந்திரமூர்த்தி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் பாராட்டினர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory