» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஒட்டுண்ணுயிரி தொழில் நுட்ப முறையில் மீன் வளர்ப்பு ஒருநாள் வளாக பயிற்சி

வியாழன் 10, நவம்பர் 2022 9:01:07 PM (IST)


தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "ஒட்டுண்ணுயிரி தொழில் நுட்ப முறையில் மீன் வளர்ப்பு” குறித்த ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி அளிக்கப்பட்டது

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "ஒட்டுண்ணுயிரி தொழில் நுட்ப முறையில் மீன் வளர்ப்பு’’ பற்றிய ஒரு நாள்; வளாக வழியிலான பயிற்சி 10.11.2022 அன்று நடைபெற்றது. 

இதில் 9 பயனாளிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டு பயன் பெற்றனர். இப்பயிற்சியில் ஒட்டுண்ணுயிரி என்றால் என்ன, முக்கியத்துவம், இத்தொழில் நுட்பத்திற்கேற்ற நீர் வாழ் உயிரினங்களின் வளர்ப்பு முறைகள், பயன்பாடுகள், செயல் திறன், மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகிய தலைப்புகளில் தொழில் நுட்ப விளக்க பயிற்சி வழங்கப்பட்டது. 

இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர்இ முனைவர் ப. அகிலன் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், தனது உரையில் இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். 

இப்பயிற்சியின் மூலம் தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு வழிவகையாக அமையும். திரு. அ. அனிக்ஸ் விவேக் சந்தியா, உதவிப் பேராசிரியர் மற்றும் முனைவர் சா. ஜுடித் பெட்ஸி, உதவிப் பேராசிரியர்;, மீன்வளர்ப்புத்துறை அவர்கள் இப்பயிற்சியை விரிவாக நடத்தினர். இப்பயிற்சியைப் பற்றி மேலும் விவரம் தெரிந்து கொள்ள இவர்களை (8072208079) தொடர்பு கொண்டு பயன் பெறவும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory