» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஏபிசி மகாலட்சுமி கல்லூரி சார்பில் வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி

புதன் 10, ஆகஸ்ட் 2022 8:18:06 AM (IST)தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி நாட்டுநல பணித்திட்டம் சார்பில் வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி ஏபிசி மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணி திட்ட அணியான 47 மற்றும் 57 பிரிவினர் சார்பில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் பகுதியாக வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று தாளமுத்துநகரில் நடைபெற்றது. 

இந்நிகழ்வினை நாட்டுநல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சண்முகப்பிரியா மற்றும் பேராசிரியர் வசந்தசேனா ஆகியோர் செய்திருந்தனர். நாட்டுநலப்பணிதிட்டத்தின் செயலாளர்  சந்தியா தாளமுத்துநகர் மற்றும் சுனாமி காலனி பகுதிகளில் வீடுதோறும் தேசிய கொடியினை வழங்கினார். இந்நிகழ்வில் தாளமுத்துநகர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வமணி உடன் இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory