» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாநில சிலம்பம் போட்டி: காமராஜ் பள்ளி சாதனை

செவ்வாய் 22, மார்ச் 2022 10:20:55 AM (IST)



மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை நிர்வாகிகள் பாராட்டினர்.

தமிழ்நாடு சிலம்பம் அசோசியேசன் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி ராகவி 34-38 எடைப்பிரிவில் 2ம் இடத்தையும், பிளஸ் 1 மாணவர் ஹார்ட்வின் 34-38 எடைப்பிரிவில் 3ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். மாநில அளவில் 2ம் இடம் பெற்ற மாணவி ராகவி அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்கிறார்.

இதேபோல் கன்னியாக்குமரியில் அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில் நடந்த அகில இந்திய சிலம்பம் போட்டியில் காமராஜ் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் மதன்குமார் 40க்கு கீழ் உள்ள எடைப்பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் தெற்கு ஆசிய அளவில் மலேசியாவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்கிறார்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், சிலம்பம் பயிற்சியாளர் ஸ்டீபன், உடற்கல்வி இயக்குநர் ஜெயக்குமாரி, உடற்கல்வி ஆசிரியை அமுதசகிலா ஆகியோரை பள்ளி தலைவர் அழகேசன், பள்ளி செயலர் நவநீதன், கல்விக்கமிட்டி உறுப்பினர்கள், தலைமையாசிரியர் நீலகண்டன், உதவி தலைமை ஆசிரியை மாலதி, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory