» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தூய்மை திட்டம்

புதன் 22, செப்டம்பர் 2021 11:25:20 AM (IST)



தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

தூய்மை பாரத திட்டம் 2021-ன் ஒரு பகுதியாக காமராஜ் கல்லூரி வளாகத்தில் உடைந்த மற்றும் பழுதான நிலையில் இருந்த மரக்கிளைகள் , தேவையற்று கிடந்த குப்பைகள் மற்றும் பொருட்கள் அகற்றப்பட்டன. திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடங்களின் மேற்கூரைகளில் உள்ள குப்பை கூழங்கள் அகற்றப்பட்டு மழைநீர் வடிகால் செம்மைப்படுத்தப்பட்டன. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் சீர் செய்யப்பட்டன. 

இப்பணிகளில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சுமார் 100 பேர் பங்கேற்றனர். இப்பணிகளை முதல்வர் (பொறுப்பு) கோ.நாராயணசாமி தலைமையில், நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை குழுவின் ஒருங்கிணைப்பாளர் து. நாகராஜன், நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி அ. கலையரசி ஆகியோர் மேற்கொண்டனர். இப்பணிகள் கல்லூரியின் தாவரவியல் துறைத்தலைவர் த.பொன்ரதி மற்றும் கல்லூரி கண்காணிப்பாளர் பு.சரவணன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory