» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தினம்

செவ்வாய் 16, மார்ச் 2021 11:41:50 AM (IST)தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கான குடிமக்கள் நுகர்வோர் கழகம் துவங்கப்பட்டு, உலக நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்றுப் பேசினார். கழகத்தை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் லதா மகேஸ்வரி இணைய வழியாக துவக்கி வைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நுகர்வோர் உரிமைகள், கடமைகள், சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை, தூத்துக்குடி எம்பவர் அமைப்பின் செயல் இயக்குநர் சங்கர் கல்லூரி மாணவிகளிடையே ஏற்படுத்தினார்.

மேலும் நுகர்வோர் விழிப்புணர்வில் பெரும் பங்காற்றிய கல்லூரி பேராசிரியர்களான தங்கசெல்வம், வினோதினி சில்வியா, எமிமா ஆகியோருக்கு எம்பவர் நுகர்வோர் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. விருதுகளை தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் சங்கர் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரி துணை முதல்வர் சூர்யகலா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory