» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விளையாட்டு விழா
ஞாயிறு 16, பிப்ரவரி 2020 11:52:19 AM (IST)

பிடாநேரி பஞ்சாயத்து சமத்துவபுரத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா நடைப் பெற்றது.
சமத்துவபுரம் வார்டு உறுப்பினர் மாரிமுத்து தேசிய கொடியேற்றி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் . தலைமை ஆசிரியர் அன்பாய் செல்வம் தலைமை தாங்கினார் ஆசரியர் பிரபாகர் மோசஸ் முன்னிலை வகித்தார். நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் சுஜித்செல்வசுந்தர், தனபால் , ஜெய்சன் சாமுவேல் முதலியோர் பள்ளி மாணவ மாணவியர் களுக்கும் முன்னாள் மாணவ மாணவியர்களுக்கும் , பொதுமக்களுக்கும் , சிறப்பு விருந்தினர்களுக்கும் விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.
பரிசளிப்பு விழாவில் தலைமை ஆசிரியை அன்பாய் செல்வம் வரவேற்றார். பிடாநேரி பஞ்சாயத்து தலைவர் சலேட் மெர்சி தலைமை தாங்கி தலைமை உரையாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பவுளி சாமுவேல் நன்றி கூறினார் .விழாவிற்கான ஏற்பாடுகளை சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி, மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளி தாளாளர் சந்திரன் தலைமை ஆசிரியர் பொறுப்பு தன்ராஜ் ஜேக்கப் ,நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல், உடற்கல்வி ஆசிரியர்கள் சுஜித் , தனபால், தலைமை ஆசிரியை அன்பாய் செல்வம் , ஆசிரியர் பிரபாகர் மோசஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி .
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:04:05 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு
திங்கள் 29, மார்ச் 2021 5:09:29 PM (IST)

வ.உ.சி. கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!!
செவ்வாய் 16, மார்ச் 2021 3:07:21 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தினம்
செவ்வாய் 16, மார்ச் 2021 11:41:50 AM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி
புதன் 24, பிப்ரவரி 2021 12:40:21 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு
திங்கள் 15, பிப்ரவரி 2021 11:35:29 AM (IST)
