» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

படுக்கப்பத்து மாற்றுப்பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 8:31:10 AM (IST)படுக்கப்பத்து மாற்றுப்பள்ளி மாணவர்கள் கன்னியாகுமரிக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பினர், 

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞான சௌந்தரி, உதவி திட்டஅலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் மாவட்ட அலுவலர் கூடலிங்கம் வழிகாட்டுதலின்படி சாத்தான்குளம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட படுக்கப்பத்து மாற்றுப்பள்ளி இணைப்பு மையம் பள்ளயில் பயிலும் 15 மாணவர்கள் பள்ளிதலைமை ஆசிரியர் சேகர் அனுமதியுடன் வட்டார வளமைய மேற்பார் வையாளர் (பொ).மகேஸ்வரி தலைமையில் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி, ஜெயந்தி, ஜெஸிதிரேஸ் கார்த்திகா, சுதாஆகியோர் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு சென்றனர். 

அங்குவரலாற்றுச் சிறப்புமிக்க இடமான காந்திமண்டபம், விவேகானந்தர் பாறை, மற்றும் சிறுவர் பூங்கா ஆகிய இடங்கள் பார்வையிட்டனர். அதில் .மாணவர்கள் வரலாற்றுத் தலைவர்கள் பற்றியும் பூங்காவில் மரங்கள் வளர்ப்பதுபற்றியும், பராமரி ப்பதுபற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் அறிந்துகொண்டனர். சுசீந்தரம் கோயிலின் சிற்பங்கள் பார்வையிட்டு தொிந்து கொண்டனர். இந்தகல்விச் சுற்றுலா மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory