» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

புதன் 12, பிப்ரவரி 2020 5:11:51 PM (IST)

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது என்று பள்ளிக் கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில்  கடந்த காலங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய சில பள்ளிகளில், பொதுத்தேர்வு நடைபெறும் சமயங்களில் சில தவறுகள் நடந்தது தேர்வுத்துறையின் கவனத்துக்கு வந்தது. இதனை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்படுகின்ற போது அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களே தேர்வு மையங்களில், தேர்வு பணிகளில் ஈடுபடுகின்றார்கள். 

அவ்வாறு அவர்கள் ஈடுபடும் போது சில தவறுகள் நடைபெறுவதாக தேர்வுத்துறையின் கவனத்திற்கு வந்ததை அடுத்து,  10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது என்று பள்ளிக் கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மேலும் அடையாள அட்டை இல்லாதவர்களை அனுமதிக்க கூடாது எனவும் அறிவுரை வழங்கி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory