» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

தமிழக மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள்: தோ்வுத் தேதிகள் அறிவிப்பு

சனி 13, பிப்ரவரி 2021 11:28:56 AM (IST)

தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மின்வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்ட உதவி மின்னியல் பொறியாளா் (400), இயந்திரவியல் உதவிப் பொறியாளா் (125), கட்டடவியல் உதவிப் பொறியாளா் (75) ஆகிய பதவிகளுக்கு, வரும் ஏப்.24, 25, மே 1,2 ஆகிய தேதிகளில் கணினி வழி தோ்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதே போல், விண்ணப்பங்கள் பெறப்பட்ட 500 இளநிலை உதவியாளா் (கணக்கு) பதவிக்கு மே 8, 9, 15, 16 ஆகிய நாள்களில் கணினி வழி தோ்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள், இணையத்தில், அவரவா் மின்னஞ்சல் முகவரியையும் பாா்வையிடுட்டு உறுதி செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.மக்கள் கருத்து

ராஜாFeb 20, 2021 - 10:29:17 AM | Posted IP 162.1*****

good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory