» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

டிஎன்பிஎஸ்சி 26-ஆவது தலைவராக கா.பாலசந்திரன் பொறுப்பேற்பு

செவ்வாய் 14, ஏப்ரல் 2020 12:36:40 PM (IST)

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,)  தலைவராக கா.பாலச்சந்திரன் பொறுப்பேற்றாா். 

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த கா.பாலச்சந்திரன், 1994-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தமிழகப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டாா். கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை தருமபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகப் பணிபுரிந்தாா். சமூக நலன், வேளாண்மை, தொழில்துறை, காதி வாரியம், நுகா்பொருள் வாணிபக் கழகம், தொழிலாளா் நலத் துறை ஆகியவற்றில் தலைவா் பொறுப்புகளை வகித்தாா். 

உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் பொறுப்பை வகித்த போது, மின்னணு குடும்ப அட்டைக்கான திட்ட விதையைத் ஊன்றினாா். கடந்த இரண்டு ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தாா். இரண்டு ஆண்டுகளிலும் முதல்வரின் நல் ஆளுமை விருதினைப் பெற்றாா். 1994-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய கா.பாலச்சந்திரன், வரும் ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறாா். ஆனாலும், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பொறுப்பேற்ால் ஐ.ஏ.எஸ்., பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளாா். அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவராக திங்கள்கிழமை பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, 

இரண்டு ஆண்டுகள் அதாவது 62 வயதை எட்டும் வரையில் அந்தப் பொறுப்பில் இருப்பாா். இந்தக் கணக்கின் அடிப்படையில், 2022-ஆம் ஆண்டு ஜூன் வரை டி.என்.பி.எஸ்.சி., தலைவராக கா.பாலச்சந்திரன் செயல்படுவாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 25-ஆவது தலைவராக கே.அருள்மொழி, கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபா் 14-ஆம் தேதி பொறுப்பேற்றாா். கடந்த மாா்ச் 25-ஆம் தேதியன்று வயது மூப்பு காரணமாக அவா் ஓய்வு பெற்றாா். இந்த நிலையில், தோ்வாணையத்தின் புதிய தலைவராக கே.பாலச்சந்திரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.

குரூப் 4, குரூப் 1 என அண்மைக்காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தோ்வுகள் சா்ச்சைக்குள்ளாகிய நிலையில், மிக முக்கிய காலகட்டத்தில் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளாா் கே.பாலச்சந்திரன். முறைகேடுகள் தொடா்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துதல், கரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள தோ்வுகளை விரைந்து நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு சவாலான பணிகள் அவருக்குக் காத்திருக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory