» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

புதன் 29, ஜனவரி 2020 4:45:37 PM (IST)

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, எ.ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்.  

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- (ரூபாய் இரண்டு இலட்சம்)ற்கு மிகாமல் உள்ள மாணவ/மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2,00,000/-(இரண்டு இலட்சம்) வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசாரல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாணவ/மாணவிகள் இதை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகுதிகள்:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர்கள். பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-(ரூபாய் இரண்டு இலட்சம்)ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் குறித்து தகுதி மற்றும் விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி, விண்ணப்பம் பெற்று, பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தகுதியான மாணவர்கள் 15.02.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory