» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

குவைத் நாட்டில் ஓட்டுநர், சமையலர் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

புதன் 29, ஜனவரி 2020 8:23:11 AM (IST)

குவைத் நாட்டில் இலகுரக வாகன ஓட்டுநர்கள், சமையலர்கள் மற்றும் வீட்டு வேலை பணிகளுக்கு விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பில், குவைத் நாட்டில் பணிபுரிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ECNR Passport உள்ள 25 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட அரபு நாட்டு ஓட்டுநர் உரிமம் பெற்ற இலகுரக ஓட்டுநர்கள் (Light Vehicle Driver) மற்றும் சமையலர்கள் - அரபு உணவு வகைகள் (Male House Cook) பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.

ஓட்டுநருக்கு மாத ஊதியம் ரூ.25,000/- முதல் ரூ.32,000/- வரை, சமையலருக்கு மாத ஊதியம் ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை மற்றும் இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு, மருத்துவ சலுகை ஆகியவைகள் குவைத் நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். மேலும் 31 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட வீட்டு வேலை செய்யும் பெண் பணியாளர்கள் (House Maid) தேவைப்படுகிறார்கள். மாத ஊதியம் ரூ.25,000/- முதல் ரூ.28,000/- வரை மற்றும் உணவு, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு, மருத்துவச்சலுகை குவைத் நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

மேலே தெரிவிக்கப்பட்ட பணிக்காலியிடத்திற்கான நேர்காணல் 03.02.2020 திங்கட்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, அனுபவ சான்றிதழ், புகைப்படம், செல்லத்தக்க பாஸ்போர்ட், அசல் மற்றும் நகல்கள் ஆகியவற்றுடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண். 42, ஆலந்தூர் சாலை, வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032 அலுவலகத்திற்கு 03.02.2020 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நேரடியாக வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் மூலமாகவும் www.omcmanpower.com மற்றும் 044-22505886 / 22502267/ 9566239685 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம். இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண். Rc.No.B-0821/ CHENNAI/CORPN/1000+/5/308/84 ஆகும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory