» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

தேசிய தொழிற்பயிற்சி சான்று பெற தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

செவ்வாய் 28, ஜனவரி 2020 4:26:38 PM (IST)

2020ம் ஆண்டு ஜுன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : 2020ம் ஆண்டு ஜுன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல் வகை (Category-I): 

தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்:

ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Allied  தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் பொருட்டு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

இரண்டாம் வகை (Category-II): 

திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்:

திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (COE NTC) பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

மூன்றாம் வகை (Category-III): 

ஆகஸ்ட் 2018-க்கு முன் SCVT சேர்க்கை பெற்றவர்:

ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவு பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

நான்காம் வகை (ஊயவநபழசல-Iஏ) 

பிற விண்ணப்பதாரர்கள்:

i. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவர் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்ப இல்லை.

ii. தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு/உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற் பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

iii. ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டில் SCVT திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப் பெற்ற பயிற்சியாளர்கள் இந்த Category-இன் கீழ் தனித்தேர்வராக விண்ணப்பித்து NTC பெறலாம்.

மேற்கண்ட நான்கு வகைகளிலும் தனித்தேர்வராக ஒரு தொழிற்பிரிவில் தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள அத்தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள I, III & IV வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (இரண்டாம் வகையைத் தவிர) முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theroy) பாடத்தில் 12.03.2020 மற்றும் செய்முறை (Practical) தேர்வு 13.03.2020 ஆகிய தேதிகளில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்துறையால் நடத்தப்படும். கருத்தியல் தேர்வில் கொள்குறி வகை வினாக்கள் (objective type questions) மட்டுமே இடம் பெறும். 

கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும். தேர்வு மையம் பின்னர் அறிவிக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் இரண்டாம் வகை விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஜுன் 2020-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் முதல் வருட தேர்வில் தனித்தேர்வராக (Private Candidates) கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து தொழிற்பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு NCVT, புது டெல்லி மூலம் தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்படும்.

தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus), நெறிமுறைகள் (புரனைநடiநௌ) மற்றும் இது தொடர்பான பிற விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.200/- செலுத்தியமைக்கான செலுத்துச்சீட்டு (Challan), கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 07.02.2020-க்குள் தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

U.Jancy RaniJan 28, 2020 - 04:38:56 PM | Posted IP 108.1*****

ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் யுடடநைன Change the Font

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory