» சினிமா » செய்திகள்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பாராட்டிய ரஜினி: சசிகுமார் நெகிழ்ச்சி!!
சனி 17, மே 2025 10:43:03 AM (IST)

டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்ம் சசிகுமாரை போனில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சசிகுமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: "படம் சூப்பர் என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்துக்கு சொல்லவா வேண்டும். 'அயோத்தி', 'நந்தன்' படம் பார்த்து பாராட்டிய ரஜினி ஹாட்ரிக் பரவசமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் பார்த்து, சூப்பர் சசிகுமார் என அழுத்திச் சொன்னார்.
‘தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க. சொல்ல வார்த்தையே இல்ல. அந்த அளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீபகாலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்’ என அவர் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படக் குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி” என்று சசிகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹாரர் - சயின்ஸ் பிக்சன் : ரைசா வில்சன் நடிக்கும் நோவா!
வியாழன் 5, மார்ச் 2026 12:08:49 PM (IST)

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 5, மார்ச் 2026 12:02:04 PM (IST)

சிக்ஸ் பேக் ஆபத்தானது; யாரும் முயற்சி செய்யாதீர்கள்! - நடிகர் பரத் பகிரங்க எச்சரிக்கை
வியாழன் 5, மார்ச் 2026 11:55:59 AM (IST)

துபாயில் சிக்கித் தவிப்போருக்கு நிபந்தனையற்ற உதவி: நடிகர் சோனு சூட் அதிரடி அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 11:40:15 AM (IST)

ஜெயிலர் 2 முதல் பாகத்தை விட மாஸாக இருக்கும்: சுராஜ் வெஞ்சரமுடு நெகிழ்ச்சி
செவ்வாய் 3, மார்ச் 2026 12:40:27 PM (IST)

எஸ்டிஆர்-51 திரைப்படத்தில் மீண்டும் இணையும் மெகா கூட்டணி: சிலம்பரசன் - சந்தானம் காம்போ!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:47:29 AM (IST)

