» சினிமா » செய்திகள்

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!

வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)



விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் நீ சிங்கம் தான் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

கிரிக்கெட்டில் கிங் என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கும் ரசிகர்கள் ஏராளம் பேர் உள்ளனர். கடந்த சீசனை காட்டிலும் நடப்பு சீசனில் பெங்களூரு கோப்பையை வெல்லும் முனைப்போடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதில், கோலியின் ஆட்டம் தான் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. கடைசி வரை நின்று வெற்றி வாய்ப்பை தேடி தருகிறார்.

கோலிக்கு பிடித்த பாடல்: இந்நிலையில், விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான். தற்போது இதைத்தான் அதிக முறை கேட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். தனது கையில் இருந்த போனை எடுத்து காட்டிய கோலி; அதில் சிம்பு நடித்த பத்து தல படத்தில் இடம்பெற்ற நீ சிங்கம் தான் பாடலை குறிப்பிட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து கோலியின் வீடியோவை பார்த்த சிம்பு அதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அதில் விராட் கோலியை டேக் செய்து நீ சிங்கம் தான் என நெகிழ்ச்சியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர். மேலும், நீ சிங்கம் பாடல் தற்போது கோலிக்காக டெடிகேட் செய்தும் வருவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பவானி ஷங்கர், கெளதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த 2023இல் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பத்து தல படத்தில் சிம்புவிற்கு ஹீரோயின் கிடையாது என்பது பரவலாக பேசப்பட்டது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீ சிங்கம் தான பாடலை விவேக் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory