» சினிமா » செய்திகள்
ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது
செவ்வாய் 11, மார்ச் 2025 8:38:18 AM (IST)

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கி உள்ளது.
ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ‘ஜெயிலர்’ 2-ம் பாகத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ரஜினியின் ‘ஜெயிலர்’ முதல் பாகம் படம் 2023-ல் வெளியாகி ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. ஜெயிலர் இரண்டாம் பாகமும் உருவாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நேற்று தொடங்கி உள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரத்தக்கறை சட்டை அணிந்த நிலையில் இருக்கும் ரஜினிகாந்தின் தோற்றத்தையும் வெளியிட்டு இருக்கிறது. ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணன், மிர்னா மோகன் ஆகியோரும் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளனர்.
மேலும் புதிய வில்லன் நடிகர்கள் இதில் நடிக்கலாம் என்று தெரிகிறது. சென்னையில் இரண்டு வாரங்கள் ஜெயிலர் 2 படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்றும், இதில் ரஜினியும் மற்ற நடிகர்களும் பங்கேற்று நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு: 134 திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்த தடை!
புதன் 18, பிப்ரவரி 2026 12:28:35 PM (IST)

பாக்கெட் நாவல்: தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - மாளவிகா மோகனன்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:40:57 PM (IST)

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:16:58 PM (IST)

தேர்தலுக்கு முன்னதாகவே வெளியாகும் ரஜினி-கமல் படத்தின் புரோமோ!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:39:24 PM (IST)

ரூ.2.52 கோடி செலுத்தத் தவறினால் 6 மாத சிறை: ரஜினி பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:31:33 PM (IST)

விஜயின் ஜனநாயகன் தாமதம் : திரையரங்குகளுக்கு ரூ.100 கோடி நஷ்டம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 5:05:48 PM (IST)

