» சினிமா » செய்திகள்

பிளடி பெக்கர் முழு நீள காமெடி படம் அல்ல : இயக்குநர் பேட்டி!

சனி 19, அக்டோபர் 2024 12:09:11 PM (IST)



நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் "பிளடி பெக்கர்" படம் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.

நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளடி பெக்கர்' . இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் கூறும்போது, "நெல்சனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். தனியாகப் படம் பண்ண முயற்சி செய்தபோது அவரிடம் சில ஐடியாக்கள் கேட்டேன். இந்தக் கதையை கேட்டதும் அவர், நானே தயாரிக்கிறேன் என்றார். பிச்சைக்காரர் ஒருவரின் கதைதான் படம். அவர் எப்படி இந்த நிலைமைக்கு வந்தார், பிறகு அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று கதை செல்லும். 

படத்தில் டார்க் காமெடி இருக்கும் என்றாலும் இது முழு காமெடி படம் இல்லை. முதலில் வேறு சில நடிகர்களை மனதில் வைத்துதான் கதையை எழுதினேன். எழுதி முடிக்கும்போது, யாருமே யோசிக்க முடியாத ஒரு ஹீரோவை பிச்சைக்காரனாக நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அப்படித்தான் கவினிடம் பேசினேன். அவர் கதையை கேட்டுவிட்டு நடிப்பதாகச் சொன்னார். படத்தில் கவினுக்கு ஜோடி கிடையாது. அக்‌ஷயா ஹரிஹரன் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். பிச்சைக்காரன் தவிர இன்னொரு லுக்கும் கவினுக்கு இருக்கிறது” என்றார்.

இப்படம் வரும் 31-ம் தேதி தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தீபாவளியன்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர், சிவகார்த்திகேயனின் அமரன், துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory