» சினிமா » செய்திகள்

‘வாழை’ திரைப்படத்துக்கு ரஜினி பாராட்டு : மாரி செல்வராஜ் நன்றி!

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 11:55:58 AM (IST)



‘வாழை’ திரைப்படத்தை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு  இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "மாரி செல்வராஜ் உடைய ‘வாழை’ படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்துக்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார்.

அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.

மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்” இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

ரஜினியின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்து பதிலளித்துள்ள மாரி செல்வராஜ், "அன்று பழைய தகரப்பெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன் . உங்கள் வாழ்த்துக்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸடார் அவர்களே!” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



CSC Computer Education



Thoothukudi Business Directory