» சினிமா » செய்திகள்

ஊட்டியில் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா காயம்!

சனி 10, ஆகஸ்ட் 2024 11:56:01 AM (IST)

ஊட்டியில் சண்டை காட்சியில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் திரைக்கு வரவுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்று வருகிறது

ஊட்டியில் உள்ள "நவாநகர் பேலஸ்" என்ற இடத்தில் சண்டை காட்சிகள் படக் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் "ஜூனியர் பைட்டர்ஸ்" உடன் சண்டை காட்சி நடந்த போது, நடிகர் சூர்யாவுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். லேசான காயம் என்பதால் சிறிது ஓய்வுக்கு பின்பு அவர் மீண்டும் படபிடிப்பில் கலந்து கொண்டார். இந்தநிலையில் நடிகர் சூர்யாவின் மகனுக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நடிகர் சூர்யா அவரது பிறந்த நாளை கொண்டாட ஊட்டியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் சூரியாவின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது இருப்பினும் சூர்யா மீண்டும் ஊட்டி வந்து படபிடிப்பில் கலந்து கொள்வார் என்றும், ஊட்டியில் 45 நாட்கள் படப்பிடிப்புகள் நடக்க உள்ளது என்றும் படக்குழுவினர் கூறினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:44:57 PM (IST)


Sponsored Ads



CSC Computer Education



Thoothukudi Business Directory