» சினிமா » செய்திகள்

தனுஷ் நடிக்க திடீர் கட்டுப்பாடு: திரைப்பட சங்கங்களின் கூட்டு கூட்டத்தில் தீர்மானம்!

செவ்வாய் 30, ஜூலை 2024 11:48:36 AM (IST)

படங்களில் நடிகர் தனுஷ் நடிக்க கட்டுப்பாடு விதித்தும், ஆகஸ்டு 16-ம் தேதி முதல் புதிய படங்கள் தயாரிப்பதை நிறுத்திவைத்தும் திரைப்பட சங்கங்களின் கூட்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திரைப்பட சங்கங்களின் கூட்டு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், திரையரங்க மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் போன்றவற்றின் நிர்வாகிகள், வினியோகஸ்தர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓ டி டி தளங்களில் வெளியிட வேண்டும்

* இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்று இருந்தால் அந்த திரைப்படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும்.

நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை தொடங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கிறது. அந்த நிலையை மாற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது.

அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் என்பதால் வருகிற 16.8.2024 முதல் புதிய திரைப்படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை வருகிற அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக்கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

* நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால் அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டி உள்ளது.

அதனால் வருகிற 1.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்துவது என கூட்டத்தில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:44:57 PM (IST)


Sponsored Ads


CSC Computer Education




Thoothukudi Business Directory