» சினிமா » செய்திகள்

மம்மூட்டி எடுத்த புகைப்படம் ரூ.3 லட்சத்துக்கு ஏலம்!

செவ்வாய் 2, ஜூலை 2024 5:22:37 PM (IST)



நடிகர் மம்மூட்டி எடுத்த பறவை புகைப்படம் புகைப்படக் கண்காட்சியில் ரூ.3 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது.

நடிகர் மம்மூட்டிக்கு நடிப்பைத் தாண்டியும் பல்வேறு விஷயங்களில் ஈடுபாடு உண்டு. கார்களின் காதலரான அவர், பல்வேறு மாடல் கார்களை வைத்திருக்கிறார்.புகைப்படம் எடுக்கும் ஆர்வமும் உண்டு. இதற்காக விலையுயர்ந்த கேமராக்களை வாங்கி வைத்துள்ளார். சக நடிகர்களையும் இயற்கை காட்சிகளையும் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் அவர் எடுத்த பறவை புகைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்தப் புகைப்படம், மறைந்த புகழ்பெற்ற பறவையியலாளரும், எழுத்தாளருமான கே.கே.நீலகண்டன் என்ற இந்துச்சூடனின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கொச்சியில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

அதை ரூ.3 லட்சத்துக்கு கோட்டக்கல்லைச் சேர்ந்த அச்சு என்ற தொழிலதிபர் வாங்கியுள்ளார். புதிதாக உருவாகும் நட்சத்திர ஓட்டலில் அந்தப் புகைப்படம் இடம்பெற இருக்கிறது. ஏலத் தொகையை, இந்துச்சூடன் அறக்கட்டளைக்கு மம்மூட்டி வழங்கியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education





Thoothukudi Business Directory