» சினிமா » செய்திகள்

டி20 சாம்பியன் இந்திய அணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அர்ப்பணித்த பாடல்!

திங்கள் 1, ஜூலை 2024 12:35:14 PM (IST)



டி20 உலக காேப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. இந்நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாணியில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்காக பிரத்யேக வீடியோ ஒன்றை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இசையில் வெளிவந்த ‘மைதான்’ படத்தில் இடம்பெற்ற ‘Team India Hai Hum’ என்ற பாடலை தனது குழுவினருடன் இணைந்து பாடி, அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த பாடல் சுமார் 3.37 நிமிடங்கள் கொண்டுள்ளது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது இசைக்குழுவினர் முழு உற்சாகத்துடன் பாடி அசத்தியுள்ளனர். இது தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.



இந்திய அணி கடந்த 2007-க்கு பிறகு தற்போது தான் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதோடு ஐசிசி நடத்தும் தொடரிலும் கடந்த 2013-க்கு பிறகு இப்போது தான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கபில் தேவ், தோனி வழியில் இந்தியாவுக்காக உலகக் கோப்பை வென்ற கேப்டனாக ரோகித் சர்மா வரலாறு படைத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education





Thoothukudi Business Directory