» சினிமா » செய்திகள்
தென் அமெரிக்காவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு!
சனி 29, ஜூன் 2024 4:48:37 PM (IST)

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்துக்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.குட் பேட் அக்லியின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் சென்றார்.
இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து தென் அமெரிக்காவில் சில நாள்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படப்பிடிப்பு நிறைவு: படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:23:59 PM (IST)

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்!
திங்கள் 17, மார்ச் 2025 11:56:58 AM (IST)

உலகளவில் விடாமுயற்சி’ வசூலை முந்திய ‘டிராகன்’!
வியாழன் 13, மார்ச் 2025 11:05:32 AM (IST)

முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே
புதன் 12, மார்ச் 2025 5:28:29 PM (IST)

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது
செவ்வாய் 11, மார்ச் 2025 8:38:18 AM (IST)

வாடிவாசல் படத்தின் இசைப்பணிகள் துவங்கிவிட்டது: ஜி.வி. பிரகாஷ் குமார்
வெள்ளி 7, மார்ச் 2025 12:45:21 PM (IST)
