» சினிமா » செய்திகள்
எனக்கு ஏடிஹெச்டி’ குறைபாடு உள்ளது: நடிகர் ஃபஹத் ஃபாசில் பகிர்வு
செவ்வாய் 28, மே 2024 4:14:21 PM (IST)
"நான் ஏடிஹெச்டி என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.

நான் மருத்துவரிடம் 41 வயதில் இந்த நோயை குணப்படுத்த முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர், சிறுவயதாக இருந்தால் இந்த நோயை உடனே குணப்படுத்தி விடலாம் என்றார்” எனப் பேசினார். ஃபஹத்தின் இந்த பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏடிஹெச்டி (ADHD): ‘Attention-deficit/hyperactivity disorder’ என்பது மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நரம்பியல் குறைபாடு என மருத்துவர்களால் விளக்கப்படுகிறது. கவனச்சிதறல் குறைபாடு என்பது இதன் எளிய விளக்கம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கவனச் சிதறல் காரணமாக குறிப்பிட்ட வேலையை அதற்கு உண்டான காலத்துக்குள் முடிக்க முடியாமல் தவிப்பது உண்டு.
ஹைபர் ஆக்டிவாக இருப்பது, கவனச்சிதறல், உணர்ச்சிகளை அடக்க முடியாமை, வேலையில் கவனம் செலுத்த முடியாமை, அதிகமாக பேசிக்கொண்டேயிருப்பது உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறிகளாக குறிப்பிடப்படுகின்றன. நடிகர் ஃபஹத் ஃபாசில் தனக்கு இந்த நோய் இருப்பதாக தெரிவித்திருப்பதன் மூலம் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)

எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் : சந்தானம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:39:59 PM (IST)

பிராமண சமூகத்தைப் பற்றி அவதூறு கருத்து: மீண்டும் மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:31:22 PM (IST)

சூர்யாவின் ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 11:15:33 AM (IST)

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: தக் லைஃப் படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 3:35:06 PM (IST)

வாய்ப்பு வரும்போது விட்டுவிடாதீர்கள்: ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 12:03:23 PM (IST)
