» சினிமா » செய்திகள்

விஜய் - லோகேஷ் கனகராஜ் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

திங்கள் 5, டிசம்பர் 2022 4:28:26 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் இன்று காலை பூஜையுடன் தாெடங்கியது. 

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இருவரின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை கூட்டியுள்ளது.

இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நிவின் பாலி, விஷால் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று காலை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சில நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory