» சினிமா » செய்திகள்

தனித்த அடையாளத்தோடு வெற்றி பெற்றுள்ளார்: கார்த்தியை புகழ்ந்த நாகார்ஜுனா!

வியாழன் 20, அக்டோபர் 2022 12:31:27 PM (IST)



சூர்யாவின் தம்பியாக இருந்து கொண்டு  தனித்த அடையாளத்தோடு வெற்றி பெற்றுள்ளதாக கார்த்திக்கு நடிகர் நாகார்ஜுனா புகழாரம் சூட்டியுள்ளார். 

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 21) வெளியாகிறது. இந்தப் படத்தை தெலுங்கில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸ் சார்பாக நடிகர் நாகார்ஜுனா வெளியிடுகிறார். நாகார்ஜுனாவும் கார்த்தியும் இணைந்து தோழா படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்தார் விழாவில் நாகார்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

அப்போது பேசிய நாகார்ஜுனா, ''அண்ணன் சூப்பர் ஸ்டாராக இருக்கும்போது அந்த சூப்பர் ஸ்டார் நிழலில் இருந்து வெளியே வந்து தனித்த அடையாளத்தோடு வெற்றிபெறுவது மிகக் கடினம்.  இதற்கு முன் இரு சகோதரர்களைப் பார்த்துள்ளேன். தெலுங்கில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், கன்னடத்தில் சிவராஜ்குமாரின் தம்பி, புனித் குமார். தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் சூர்யாவின் தம்பி கார்த்தியைப் பார்க்கிறேன். கார்த்தி மிகச்சிறப்பான நடிகராக இருக்கிறார்'' என்று பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory