» சினிமா » செய்திகள்

அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படங்கள்: சூரரைப் போற்று, ஜெய் பீ்ம் படங்களுக்கு கௌரவம்!

புதன் 19, அக்டோபர் 2022 5:47:32 PM (IST)



ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்ட அதிக ரேட்டிங் பெற்ற 250 இந்திய திரைப்படங்களின் பட்டியலில் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளது. 

தொடர் தோல்விகளில் இருந்த நடிகர் சூர்யாவுக்கு 2020ல் சூரரைப் போற்று, 2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் என அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் கிடைத்தன. இதனை நடிகர் சூர்யாவும் சமீபத்தில் ஒரு விருது விழாவில் பகிர்ந்து, இயக்குநர் சுதா கொங்கராவுக்கு நன்றி தெரிவிக்க, அதனைக் கேட்ட சுதா கண் கலங்கினார். 

சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை என 5 தேசிய விருதுகளை வென்றது. அடுத்த ஆண்டு ஜெய் பீம் திரைப்படமும் தேசிய விருதுகளைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் அதிக ரேட்டிங் பெற்ற 250 இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்டது. அதில் முதல் 20 இடத்திற்குள் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளது. இந்த இரண்டு படங்களும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory