» சினிமா » செய்திகள்

சினிமாவில் 45 ஆண்டுகள்: ரசிகர்களுடன் கொண்டாடிய நடிகர் மோகன்!

சனி 8, அக்டோபர் 2022 12:12:42 PM (IST)



நடிகர் மோகன் தனது சினிமா பயணத்தின் 45-வது ஆண்டை முன்னிட்டு, சென்னை முதியோர் காப்பகத்தில், நேற்று அன்னதானம் வழங்கினார்.

தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர், வெள்ளி விழா நாயகன் நடிகர் மோகன். ஒரு காலத்தில் இவர் கால்ஷீட்டுக்காக காத்திருக்காத தயாரிப்பாளர்களே இல்லை. இவர், தனது சினிமா பயணத்தின்45-வது ஆண்டில் நுழைவதை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை உள்ளம் முதியோர் காப்பகத்தில், நேற்று அன்னதானம் வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை அவருடைய ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர். நடிகர் மோகன், மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகும், ‘ஹரா’ படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசையமைப்பாளர் லியாண்டர் மார்டி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory