» சினிமா » செய்திகள்

மலேசியாவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!

வெள்ளி 7, அக்டோபர் 2022 12:11:39 PM (IST)



மலேசியாவில் கமல் நடித்துள்ள விக்ரம் பட வசூலையும் முந்தி பொன்னியின் செல்வன் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. 

கடந்த 30-ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் மலேசிய நாட்டில் தரமான வசூலை ஈட்டி வருவதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. படம் வெளியான முதல் ஆறு நாட்களில் சுமார் 11.18 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூல் செய்துள்ளதாக விநியோகஸ்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ள படம்தான் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்தது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்தப் படம் வெளியானது முதல் இதுவரையில் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் தரமான வசூலை எட்டி வருகிறது. அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் மலேசியாவிலும் மாஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாகவும். படம் வெளியான ஆறு நாட்களில் சுமார் 11.18 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு நடப்பு ஆண்டில் அந்த நாட்டில் வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டியுள்ள படம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பட வசூலையும் பொன்னியின் செல்வன் முந்தி உள்ளதாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory