» சினிமா » செய்திகள்

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' தீபாவளிக்கு ரிலீஸ்!

புதன் 5, அக்டோபர் 2022 12:07:09 PM (IST)



தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பிரின்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'டான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'பிரின்ஸ்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான ஜெஸ்ஸிகாவும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9-ம் தேதி இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory