» சினிமா » செய்திகள்

தேசிய திரைப்பட விருது விழாவில் தமிழ் கலைஞர்கள் கெளரவிப்பு

சனி 1, அக்டோபர் 2022 10:53:50 AM (IST)68ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் நடிகர்கள் சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா என பலர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். 

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷூக்கும், சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டன. 

இவை தவிர சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலியும், சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படமும், சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்நிலையில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா தில்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ் கலைஞர்கள் சூர்யா, ஜி.வி.பிரகாஷ், அபர்ணா முரளி, ஜோதிகா, மடோனா அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory