» சினிமா » செய்திகள்

எனது புகைப்படங்களை மார்பிங் செய்து அனுப்புகிறார்கள்! சீரியல் நடிகை கண்ணீர்!!

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 11:16:02 AM (IST)

"எனது புகைப்படங்களை மார்பிங் செய்து மர்ம நபர்கள் அனுப்புகிறார்கள்" என சீரியல் நடிகை லஷ்மி வாசுதேவன் கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். பல முன்னணி சீரியல்களில் அம்மா பாத்திரங்களில் நடித்து வரும் இவர், கதறி அழுத வீடியோ ஒன்றை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியது, "எனது புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ஸ் அப் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புகின்றனர். கடந்த செப்டம்பர் 11 எனக்கு 5 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதனுடன் ஒரு வந்த லிங்கை தொட்ட உடன் ஆப் பதிவிறக்கம் ஆனது. அதிலிருந்து என் மொபைல் ஹேக் ஆனது. அதன்பின் 3 நாட்கள் கழித்து மர்மநபர்கள் எனக்கு போன் செய்து, 'நீங்கள் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளீர்கள் அதை திரும்ப செலுத்துங்கள்'என கூறி குறுஞ்செய்தி வந்து கொண்டே இருந்தது.

தொடர்ந்து மோசமாக பேசி புகைப்படங்களை மாப்பிங் செய்து வைரலாக்கி விடுவோம் என மிரட்டினர். என்னுடைய வாட்சப் நண்பர்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் அனுப்புகிறார்கள் என கதறி அழுதப்படி கூறினார். இது குறித்து சைபர் பிரிவில் புகார் கொடுத்துள்ளேன் என தெரிவித்தார். இனிமே யாரும் இது போன்ற தேவையில்லாத ஆப்புகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருங்கள் என்றும் கண்ணீருடன் பேசியுள்ளார். பிரபல சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory