» சினிமா » செய்திகள்

நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் ஹீரோ ஆனார்!

புதன் 24, ஆகஸ்ட் 2022 11:45:43 AM (IST)



தமிழ் உட்பட மூன்று மொழிகளில் உருவாகும் படத்தில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். 

தனுஷின் ‘மாரி 2’ படத்தின் ‘ரவுடி பேபி’, ‘பட்டாஸ்’ படத்தின் ‘ஜில் பீரோ’, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருகாதா’ உள்ளிட்ட பல பாடல்களுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தெலுங்கில் ‘ஆலா வைகுந்தபுரமோ’ படத்தில் அவர் நடனம் அமைத்த ‘புட்ட பொம்மா’ பாடல் சூப்பர் ஹிட்டானது. தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு நடனம் அமைத்து தற்போது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். 

அவர் நடிக்கும் படத்துக்கு ‘யதா ராஜா தாதா ப்ரஜா’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் மற்றொரு ஹீரோவாக தெலுங்கு நடிகர் விகாஸ் நடிக்கிறார். சிருஷ்டி வர்மா நாயகி. இந்தப் படத்தை ஸ்ரீநிவாஸ் விட்டலா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. ஓம் மூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா மூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சுனோஜ் வேலாயுதன் இயக்குகிறார். ரத்தன் இசையமைக்கிறார். படப்பிடிப்பை நடிகர் சர்வானந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory