» சினிமா » செய்திகள்

பொன்னியின் செல்வன் டிரைலரை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 3:42:02 PM (IST)பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மற்ற பாடல்கள் மட்டும் டிரைலர் வெளியீட்டை மிகப்பெரிய அளவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அப்படத்தின் டிரைலரை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory