» சினிமா » செய்திகள்

வெங்கட் பிரபுவின் புதிய படத்திற்கு இளையராஜா - யுவன் கூட்டணி இசை..!

வியாழன் 23, ஜூன் 2022 3:37:36 PM (IST)வெங்கட் பிரபுவின் புதிய படத்தில் இளையராஜா - யுவன்சங்கர்ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'மாநாடு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான படம் 'மன்மத லீலை'. கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து வெங்கட்பிரபு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அண்மையில் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வெங்கட் பிரபுவுக்கு இது முதல் பை லிங்குவல் படம் என்பதும், நாக சைதன்யா நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்தின் மூலம் வெங்கட்பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். அதுபோல்  நாக சைதன்யா தமிழில் அறிமுகமாக உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory