» சினிமா » செய்திகள்

ராதிகாவை ஏன் அம்மானு கூப்டணும்? நடிகை வரலட்சுமி அதிரடி

செவ்வாய் 21, ஜூன் 2022 11:50:33 AM (IST)ராதிகா என் அப்பாவின் இரண்டாவது மனைவி; எனக்கு அம்மா இல்லை  என வரலட்சுமி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம், ராதிகாவின் மகள் ரேயன் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவது குறித்து பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வரலட்சுமி , ரேயன் தைரியமான பெண். இதனை அவர் எளிதாக எதிர்கொள்வார். என்னையும் நீங்கள் ஏன் ராதிகாவை அம்மா என கூப்பிடவில்லை என கேள்வி கேட்கின்றனர். ராதிகா என் அம்மா இல்லை. அவர் என் அப்பாவின் இரண்டாவது மனைவி. அவருடன் இணைந்து பணிபுரிவதில் எனக்கு மகிழ்ச்சி. எல்லோருக்கும் ஒரே அம்மாதான் இருக்க முடியும். 

எனக்கும் ஒரே அம்மாதான். ராதிகாவை நான் ஆண்டி என்றுதான் பேசுவேன். இருவரையும் சமமாக மதிக்கிறேன். ரேயனுக்கும் எனக்கும் வேறு வேறு அப்பா. அவருடைய அம்மா என் அப்பாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், என் அப்பா அவரையும் நன்றாக கவனித்துக்கொள்கிறார். ரேயனின் திருமணத்தை என் அப்பாதான் நடத்தினார் என்று அதிரடியாக தெரிவித்தார். 

வரலட்சுமி நடிப்பில் தமிழில் காட்டேரி, பாம்பன், யானை என அடுத்தடுத்து படங்கள் வெளியாகவிருக்கின்றன. இது தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகிவரும் சபரி, கன்னடத்தில் லகாம், தெலுங்கில் ஹனு மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory