» சினிமா » செய்திகள்

சிவாஜி 15வது ஆண்டு: ரஜினியுடன் இயக்குநர் ஷங்கர் சந்திப்பு

வியாழன் 16, ஜூன் 2022 10:50:15 AM (IST)சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது மகள் அதிதியுடன் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். 

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் கடந்த 2007 ஜுன் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதாவது சிவாஜி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  சிவாஜி, எம்ஜிஆர் என இருவித கெட்டப்புகளில் ரஜினிகாந்த் மிரட்டினார். குறிப்பாக மொட்டை பாஸாக ரஜினிகாந்த் வரும் காட்சிகளால் திரையரங்கம் அதிர்ந்தது என சொல்லலாம். திரையரங்குகளில் திருவிழா கோலமாக காட்சியளித்து. 

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள், விவேக்கின் நகைச்சுவை, இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டமாக படமாக்கிய விதம் என இன்றளவும் ரஜினி ரசிகர்களால் மறக்க முடியாத படமாக சிவாஜி உள்ளது. சிவாஜிக்கு பிறகு இப்படியொரு கொண்டாட்டமான படம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை என்றேதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் இயக்குநர் ஷங்கர் தனது மகள் அதிதியுடன் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். 

இதுகுறித்து ட்விட்டரில் புகைப்படம் பகிர்ந்த ஷங்கர், இந்த மறக்கமுடியாத நாளில் சிவாஜி தி பாஸ் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தில் மகிழ்ச்சி. உங்களுடைய அன்பு நேற்மறையான எண்ணத்தின் காரணமாகவும் இன்று நல்லதொரு நாளாக அமைந்தது. என்று குறிப்பிட்டுள்ளார்.  அதிதி ஷங்கரும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory