» சினிமா » செய்திகள்

ரஜினியை போல முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் என் நண்பர் : கமல்ஹாசன் பேச்சு!

திங்கள் 16, மே 2022 12:14:13 PM (IST)"ரஜினியை போல முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் எனது நண்பர்" என்று விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய கமல்ஹாசன், சினிமாவும் அரசியலும் ஒட்டிப் பிறந்தவை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத் தன்மைதான். இந்தி ஒழிக என்று சொல்வது என் வேலையில்லை, 

ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் தனது நண்பர் என்றும் சினிமாவில் ரஜினிகாந்த் தனது போட்டியாளராக இருந்து கொண்டு நண்பராகவும் இருப்பதுபோல தான் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நட்பு பேணுவதாக கமல்ஹாசன் கூறினார். விழாவில் சிம்பு, விஜய் சேதுபதி, உட்பட திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory