» சினிமா » செய்திகள்

வடிவேலு - பிரபுதேவா சந்திப்பு: வைரலாகும் வீடியோ

திங்கள் 18, ஏப்ரல் 2022 11:36:57 AM (IST)

"சிங் இன் த ரெயின்" பாடலைப் பாடி, பிரபுதேவாவை வடிவேலு கட்டிப் பிடித்து மகிழ்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

வடிவேலு காமெடி நடிகராக நடித்துள்ள படங்களில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சி கள் இன்றளவும் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கிறது. அந்த வகையில் . பிரபுதேவா, வடிவேலு நடித்த மனதைத் திருடி விட்டாய் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியை வடிவேலு - பிரபுதேவா இருவரும் நினைவுகூர்ந்துள்ளனர்.

மனதை திருடிவிட்டாய் வணிகரீதியாக தோல்விப்படம் என்றாலும் அந்தப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சி ஒன்று தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகும். இப்போது கூட அந்தக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. வடிவேலு, சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின் என்று ஹோட்டல் ஒன்றில் பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. 

பிரபுதேவா, வடிவேலு, விவேக் மூவரும் இந்தக் காட்சியில் இடம்பெற்றிருப்பார்கள் 1994ஆம் ஆண்டு வெளியான காதலன் படத்தில் முதல் முறையாக இணைந்த பிரபுதேவா- வடிவேலு கூட்டணி பலபடங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். பிரபுதேவா, வடிவேலு தற்போது சந்தித்த வீடியோ ஒன்றை பிரபுதேவா பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு அந்த சிங் இன் த ரெயின் பாடலைப் பாடி, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து மகிழ்ந்துள்ளார். நட்பு என ஒரே ஒரு வார்த்தையில் அந்த சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ளார் பிரபுதேவா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory