» சினிமா » செய்திகள்

ஒரே படத்தில் அப்பா, மகன், பேரன் நடிப்பு : சிவகுமார் பாராட்டு

வெள்ளி 15, ஏப்ரல் 2022 5:46:01 PM (IST)



நடிகர் விஜயகுமார், அவரது மகன் மற்றும் பேரன் நடித்துள்ள  ஓ மை டாக். படத்திற்கு சிவகுமார் பாராட்டு தெரிவித்தார். 

விஜயகுமார், அருண் விஜய், ஆர்னவ் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஓ மை டாக். இப்படத்தை சரோவ் சண்முகம் இயக்கி இருக்கிறார். 2 டி எண்டர்டைன்மெண்ட் சார்பில் சூர்யா ஜோதிகா தயாரித்து இருக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜயகுமார், அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் சிவகுமார் பேசும் போது, ஓ மை டாக் திரைப்படத்தை இயக்கி இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒரே படத்தில் அப்பா மகன் பேரன் நடிக்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. தெலுங்கில் நாகார்ஜூனா குடும்பத்திற்கு பிறகு, தமிழில் விஜயகுமார் குடும்பத்திற்கு அமைந்திருக்கிறது. நானும் விஜயகுமாரும் நீண்டகால நண்பர்கள். என்னை விட நான்கு வயது சிறுவன். ஆனால் நடிப்பில் எனக்கு சீனியர். நிறைய படங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory