» சினிமா » செய்திகள்

போயஸ் கார்டன் இல்லத்தில் குவிந்த ரசிகர்கள்: ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து...!

வியாழன் 14, ஏப்ரல் 2022 12:31:57 PM (IST)

தமிழ் புத்தாண்டையொட்டி தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

சித்திரை மாதம் முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.  ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டு, சித்திரை திருநாளான இன்று தமிழர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தனது வீட்டின் வாசலுக்கு இன்று வந்த நடிகர் ரஜினிகாந்த் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் ‘தலைவா... தலைவா...’ கோஷம் எழுப்பி ஆரவாரத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory