» சினிமா » செய்திகள்

வாழ்க்கையில் ஒன்று மட்டும் மாறாது: ரஜினி மகளுக்கு இளையராஜா அறிவுரை..!

செவ்வாய் 12, ஏப்ரல் 2022 5:12:08 PM (IST)



ஒருவரின் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடக்கும். ஆனால் ஒன்று மட்டும் மாறாது என  ரஜினி மகளுக்கு இளையராஜா அறிவுரை வழங்கியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று (ஏப்ரல் 11) இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தார். இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். அவரது பதிவில், என்னுடைய திங்கள்கிழமை மதியம் இசையுடன் கழிந்தது. என் இனிய இளையராஜாவுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சிகரமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். 

அவரது பதிவில் வொர்க் மோட் என குறிப்பிட்டுள்ளதால் ஐஸ்வர்யாவின் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவுக்கு பதிலளித்துள்ளார். அதில், உன்னை சந்தித்ததிலும், உன்னுடன் நேரம் செலவிட்டதிலும் எனக்கு மகிழ்ச்சி. ஒருவரின் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடக்கும். ஆனால் ஒன்று மற்றும் மாறாது. அது உண்மையான காதல். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இரு. எல்லாமே மாறும். ஆனால் ஒன்று மட்டும் மாறாது. அது காதல். என்று குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory