» சினிமா » செய்திகள்

சினிமாவில் மீண்டும் விஜயகாந்த்: இயக்குநர் தகவல்!!

புதன் 6, ஏப்ரல் 2022 12:26:05 PM (IST)

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் வேடம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என இயக்குநர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். 
 
நடிகர் விஜய்யின் பிரியமுடன் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் விஜய் மில்டன். பின்னர் தோஸ்த், நெஞ்சினிலே, சாமுராய் ஆட்டோகிராஃப், காதல் உள்ளிட்ட பல படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலி சோடா, கடுகு, 10 எண்றதுக்குள்ள போன்ற சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கிவருகிறார். 

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜயகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்தத் தகவலை பிரேமலதா விஜயகாந்த் மறுத்திருந்தார்.  இந்த நிலையில் விஜய் மில்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருப்பதாகவும், அவரது வேடம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory