» சினிமா » செய்திகள்

ஆங்கிலப் படத்திற்கு இசை: சர்வதேச விருது வென்றார் இளையராஜா!

சனி 2, ஏப்ரல் 2022 3:54:54 PM (IST)

ஆங்கிலப் படத்திற்கு இசையமைத்துள்ள இளையராஜா சர்வதேச விருதை வென்றுள்ளார்..

இளையராஜா தற்போது ஏ பியூட்டிபுல் பிரேக் அப் என்ற ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை இங்கிலாந்தை சேர்ந்த நேச்சர்ஸ் மூவீஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த நிலையில் இந்தப் படம் அம்ஸ்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதனையடுத்து இந்தப் படம் சிறந்த பின்னணி இசைக்கான விருதை வென்றுள்ளது. இந்த தகவலை பட நிறுவனம் சிறப்பு விடியோ மூலம் பகிர்ந்துள்ளது.

இந்தத் தகவல் இளையராஜா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பியூட்டிஃபுல் பிரேக் அப் படத்தை அஜித் வாசன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படம் இளையராஜாவின் 1422வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசையில் வெற்றிமாறனின் விடுதலை, விஷாலின் துப்பறிவாளன் 2, விஜய் ஆண்டனியின் தமிழரசன், சிபி சத்யராஜின் மாயோன், விஜய் சேதுபதியின் மாமனிதன், நினைவெல்லாம் நீயடா, சுசிகணேசனின் வஞ்சம் தீர்த்தாயடா உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory