» சினிமா » செய்திகள்

தமிழக முதல்வருடன் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு

செவ்வாய் 22, மார்ச் 2022 5:04:34 PM (IST)



நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், மனோபாலா, கோவை சரளா, லதா, தளபதி தினேஷ் உள்ளிட்ட வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்த நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். 

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் கே. பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தார்.

தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைக் கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தனர்.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட நடிகர் நாசர் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள் ஆகிய 5 பதவிகளை பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory