» சினிமா » செய்திகள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்: அதிகாரபூர்வமாக அறிப்பு!!

சனி 19, மார்ச் 2022 12:40:41 PM (IST)



அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

'வலிமை' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் - போனி கபூர் மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளது. இந்த மாதம் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இந்நிலையில், அஜித்தின் 62வது படமாக உருவாக இருக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், நயன்தாரா நாயகியாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் சில நாட்கள் முன் தகவல் வெளியானது. தற்போது இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த வருட இறுதியில் ஷூட்டிங் தொடங்கப்படுவதாகவும், அடுத்த வருடம் படம் ரிலீஸாகும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், அஜித்துடன் இணைந்துள்ளது பெருமையான தருணம் என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மற்ற நடிகர், நடிகைகள் விவரம் பின்பு தெரிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory